தமிழ் இலக்கியங்களில் காப்பியங்கள், புராணங்கள் இவையாவும், காலங்காலமாக மக்களிடம் செல்வாக்கு பெற்று விளங்குவன. மகாபாரதக் கதை மக்களிடம் நாடக வடிவில் நடித்துக் காட்டப்பட்டு வருகிறது. அதே சமயம் மகாபாரதத்திலுள்ள பாஞ்சாலியை வைத்து பாரதி 'பாஞ்சாலி சபதம்' எனும் புதுவகை இலக்கியத்தைப் படைத்தார். இது மகாபாரதப் பாஞ்சாலி அல்ல; பாரதியின் பார்வையில் உருவான பாஞ்சாலி. இவ்வாறு இயேசுவின் கதையைக் கூறும் வேத ஆகமத்தைக் கொண்டு ஆங்கிலத்தில் பல அல்டர்நெட் வகையறாக்கள் நாவலாகவும், திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. அத்தகைய ஒரு முயற்சியின் விளைவே இக்குறுப் புதினம்.
'பரபாஸ்' என்பது இயேசுவிற்குப் பதிலாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் ஒரு கைதியின் பெயராக வேதாகமத்தில் ஒரு சில வரிகளில் குறிப்பிடப்படுகிறது. இந்த பரபாஸைப் பற்றிய நூலாசிரியரது கற்பனை ஓட்டமே இந்த நவீனப் புனைவின் உருவாக்கம்.
Be the first to rate this book.