இளம் வயதில் தன்னுடைய சூழல் காரணமாக நாடோடியாகவும், சிறு குற்றங்கள் செய்து வாழ்பவராகவும் விளங்கிய பிரெஞ்சு எழுத்தாளரான ழான் ஜெனே, பின்னாட்களில் விளிம்புநிலை வாழ்நிலை குறித்த ஒரு சீரிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார். புரட்சிக்கான விழைவுகளையும், குற்றம் குறித்த சமூகத்தின் மனப்போக்கையும் தன்னுடைய எழுத்துகளில் மறுபரிசீலனை செய்தார்.
The Balcony நாடகம் வெளியே தெரியும் ஓர் அச்சுறுத்தும் அரசு அதிகாரத்தின் குறியீடாக ஒரு விபசார விடுதியைப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை முன்னிறுத்தி தோற்றங்களுக்கும், உண்மைகளுக்கும் இடையே உள்ள மெல்லிய கோடுகளைக் கவனப்படுத்துகிறது. கலைக்குரிய எல்லாச் சுதந்திரத்துடன் அதிகாரத்தின் நுண்செயல்பாடுகளையும் எள்ளல் செய்கிறது.
Be the first to rate this book.