INFERIORITY COMPLEX சரியானபடி தமிழ்ப்படுத்த முடியாமல் போகும்.ஆங்கில வார்த்தைகளில் இதுவும் ஒன்று.'சிறுமைப்பித்து' என்று சொன்னார் ஒரு பித்தர்.
'சிறுமிதம்' என்று பெருமிதத்தை திருப்பிப் போட்டார் ஒரு யோகியார். 'இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்று பாலத்தோடு அனுபவித்துச் சொல்லிவிட்டால் போதும் என்று கைவிரித்தார் ஒரு ரசிகமணி. கடைசியாக 'தாழ்வு மனப்பான்மை'யே சரி எனப்பட்டது. ஆங்கில நூல் ஒன்றைக் கண்ட பின் இதைத் தயாரிக்க முற்பட்டேன். இதற்குத் துணையாக நின்றவர் 'மலேயா நண்பன்' ஆசிரியர் இனிய நண்பர் ர.பா.மு.கனி அவர்கள். மேலும் திருத்தி உதவியவர், அறிஞர் சுபநாராயணன் அவர்கள் இருவருக்கும் நன்றி!
'தன்னம்பிக்கை, உழைப்பு, ஊக்கம்' இவைகளால் சிறப்படைந்த 'நகைச்சுவை அரசு கலைவாணர் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடம் இதற்குச் சிறப்புரை விரும்பினேன். அவரும் அன்பு கூர்ந்து அளித்தார். நன்றி!
-முல்லை பிஎல். முத்தையா
Be the first to rate this book.