பெரும் மனச்சுமையுடன் வாழ்ந்துவரும் மார்ட்டினின் நடத்தையில் ஏற்படும் புதிர்கள் உருவாக்கும் குழப்பங்களை மையமாகக் கொண்டு உருப்பெறும் நாவல் 'தழல்'. குற்ற உணர்வு, பழியின் சுமை ஆகியவை வாழ்வின் நுட்பமான புதிர்களாக மாறும் விந்தையின் மீது 'தழல்' வெளிச்சம் பாய்ச்சுகிறது. பழியின் சுமை ஏன் இறக்க முடியாத சிலுவையாக மாறுகிறது என்ற கேள்விக்கான விடையை நாவலாசிரியர் தரவில்லை. வாசகர்கள் தங்களுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறார்.
தீவிரமானதொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதன் தீவிரம் குன்றாமல் கையாண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. தீவிரமான கேள்விகளையும் விசாரணைகளையும் விடைதேடும் பயணங்களையும் சாத்தியப்படுத்துவதற்கான அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது. இந்த முயற்சியே இந்த நாவலின் வலிமை.
- அரவிந்தன்
Be the first to rate this book.