நம்முடைய வாழ்க்கை என்பதும் தொலைதூரப் பயணம் தான். அதனால் நம் மனதைச் சோர்வடையாமல் பாதுகாத்துக் கொள்வதற்காக நல்ல குணங்களை எடுத்துச் சென்றால்தான் வாழ்க்கைப் பயணம் இனிதாக இருக்கும்.
பகல்பொழுதில் கைகளில் விளக்கேந்தி தெருவில் நடப்பதும், புத்தியில் அவசரத்தை ஏந்திச் செயல்படுவதும் ஒன்றுதான். ஒன்றுமே விளங்காது.எப்பொழுது நம் வெற்றியில் நம்மைச் சார்ந்தவர்களும், இந்தச் சமூகமும் மகிழ்கின்றதோ அதுவே உண்மையான வெற்றியாகும்.
வாழ்க்கை என்பது கொண்டாடப்பட வேண்டும். அதற்கு பிறரின் சந்தோசத்தை நாம் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
Be the first to rate this book.