தாத்தாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பில் அஞ்சூர்யா க.செயராமன் அவர்கள் புத்தகத்தின் சிறப்பை, வாசிப்பின் அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார். திறன்பேசி காலத்தில், இஞைர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில், விழிப்புணர்வு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார். புத்தகம் வாசிப்பது சுகமான அனுபவம். வாசிப்பவர்கள் மட்டுமே உணர முடியும்.பல தலைப்புகளில் கவிதைகள் வடித்து, வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார். விழிப்புணர்வு விதைத்து உள்ளார். நூலாசிரியரின் முதல் நூல் இது. ஆனால் வாசித்தால் அப்படித் தெரியவில்லை. பல நூல்கள் எழுதிய அனுபவம் மிக்கவர் போல அறிவார்ந்த கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளார்.
Be the first to rate this book.