நம் வாழ்வில் பலரை நாம் சந்திப்போம். பலரோடு தொடர்பு கொள்வோம். பல நபர்களைக் கடந்து செல்வோம். சிலரோடு நெருக்கமாகத் தொடர்பு கொள்வோம். இந்த வகையான நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் பல்வேறு தற்குறிகளைச் சந்திக்கிறோம். இந்தத் தற்குறிகளைப் பற்றி, அவர்கள் யார் என்பதைப் பற்றி விளக்கும் வகையில் இந்த நாவல் அமைந்துள்ளது.
எழுதப் படிக்கத் தெரியாதவன். அன்றைய காலத்தில் ஆவணங்களின் தன் கையெழுத்துக்குப் பதிலாக இட்ட கீரலையே தற்குறி என்று கூறினர். அது பிற்காலங்களில் எழுதப் படிக்கத் தெரியாத நபரை குறிப்பதற்குப் பயன்பட்டது. இன்றைய காலத்தில் அரசியலில் பெரும்பாலும் புழக்கத்தில் காணப்படும் இந்த சொல், இந்நாவலின் பல இடங்களில் பல நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Be the first to rate this book.