“எப்படி வாசிக்கலாம்?” என்ற கேள்வி இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்று கூறுவதற்கான தூண்டில் அல்ல. திறந்த மனதுடன் எப்படி வாசிப்பது என்று சிந்திக்கும் முகமான கேள்விதான். அந்த சிந்தனைப் போக்கில் பரிந்துரைகளும், வாதங்களும் இடம் பெறலாம் என்றாலும், வாசிப்புச் செயல்பாட்டை பன்முகப் படுத்துவதுதான் நோக்கமே தவிர, அதற்கான முற்றுப்புள்ளியை இடுவது அல்ல.
இதுவரை என்னுடைய வரலாறு, அரசியல் தொடர்பான கட்டுரைத் தொகுப்புகளும், தமிழ் சினிமா குறித்த கட்டுரைத் தொகுப்புகளும், நூல்களும்தான் வெளியாகியுள்ளன. இதுதான் முதல் இலக்கிய விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. தொடர்ந்து “எப்படி வாசிக்கலாம்?” என்ற வகைமையில் நிறைய தமிழ் இலக்கிய பிரதிகளை வாசித்து எழுதவேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் உள்ளது. அதற்கான ஒரு துவக்கப்புள்ளியாக இந்த தொகுப்பை வைத்துக் கொள்கிறேன். மானுட சிந்தனையில் துவக்கங்கள்தான் உண்டு, முடிவுகள் இல்லை என்பதால் இந்த தொகுப்பும் ஒரு துவக்கம்தான்.
Be the first to rate this book.