தஞ்சை பிரகாஷ் முதன்மையாக ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர், தஞ்சையை மையமாக்கி தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளை நடத்தினார். சிற்றிதழ்கள் நடத்துவது, இலக்கியக்கூட்டங்களை ஒருங்கிணைப்பது, அவர் நடத்திய இலக்கிய இதழ்களில் படைப்பாளிகளை அறிமுகம் செய்து தொடக்ககாலப் படைப்புக்களை செம்மை செய்தார்.
இலக்கியவாதிகள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க வேண்டுமென நினைத்தார். ஆகவே ஒருவருக்கொருவர் விரிவான கடிதம் எழுதிக்கொள்ளும் மரபை தொடங்கி வைத்தார். டி.கே.சிதம்பரநாத முதலியார், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராரயணன் ஆகியோர் இதில் அவருடைய முன்னுதாரணங்கள். கடிதங்களுக்காகவே 'சாளரம்' இதழை நடத்தினார்.
தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது 'கதைசொல்லிகள்' என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கை தருணங்களை அவர் சிறுகதைகளில் தொட்டிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.
Be the first to rate this book.