திரைக்கதைக்கான இசை, இசைக்கான பாடல், பாடலுக்கான குரல் என்று எல்லாப் பாடகர்களையும் போலத்தான் பாடகி ஸ்வர்ணலதாவையும் இதுவரையில் கடந்துகொண்டிருந்தேன். நாடோடி இலக்கியன் என்ற ரசனைக்காரனின் எழுத்தின் வாயிலாக இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கும் வரை. இந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு அதில் வரும் பாடல்களை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது, என்னுள் எழுந்த புதிய உணர்வை நீங்களும் பெறுவீர்கள்; கூடவே, விழியோரம் சிறு துளி கண்ணீரையும். ஸ்வர்ணலதா என்ற மாயக்காரி வாழ்வதை நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் வசியம் செய்வதை இன்னும் நிறுத்தவேயில்லை.
-ஷான் கருப்புசாமி
Be the first to rate this book.