கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு. வேணுகோபால், தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்து நிற்பவர். மேலான படைப்புகளைத் தந்திருப்பவர். தனித்து வத்தாலே சிறப்புப்பெற்ற இலக்கியவாதிகளின் இன்னும் ஒரு அழகியப் பக்கங்களை இந்நூலில் சொல்கிறார் சு. வேணுகோபால். வள்ளலார், பாரதி, பெரியார், மகாத்மா காந்தி, டி.கே.சி, தி. ஜானகிராமன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், இராசேந்திரச்சோழன் என்று வெவ்வேறு பாதைகளைச் சமைத்தவர்கள் குறித்து அற்புதமான எழுத்துச் சித்திரங்களாக ஆக்கித்தந்திருக்கிறார். அர்பணிப்பு என்னும் பாத்திரங்களை ஏற்றவர்களின் தனியாத தாகத்தை இக்கட்டுரைகளில் தந்திருக்கிறார்.
Be the first to rate this book.