யானை பிழைத்த வேல்
யதார்த்தத்திற்கும் புனைவுக்கும் இடையே உள்ள விசயங்களை மங்கலாக்கும் ஒரு பின்நவீனத்துவ முயற்சி இந்நாவல், மெட்டாஃபிக்ஷன் ஒரு கருத்தை உருவாக்குவது இல்லை. மாறாக, அது நிலவுகிற யதார்த்தத்தைக் கேள்விக்குட்படுத்த விரும்புகிறது. அவ்வகையில் சமகால இந்திய/தமிழ் யதார்த்தத்தை இப்புதினம் கேள்விக்குட்படுத்துவதாக விரிகிறது. ஒரு புனைவில் பாத்திரங்களுக்கும் வாசகருக்கும் இடையே எழுப்பப்பட்ட ஒரு கற்பனைச் சுவர். நமது வழக்கிலிருந்து கூறுவதென்றால் தீண்டாமைச் சுவர். புனைவின் ஒரு பாத்திரம் அல்லது கதை சொல்பவர் வாசகரிடம் நேரடியாகப் பேசும்போது இந்தச் சுவர் உடைபடுகிறது. வாசகரின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டி இந்த நான்காவது சுவரை உடைக்கிறார் இப்புனைவின் ஆசிரியர் யூதநாதன்.
'எந்தவொரு திறந்த சமூகத்திற்கும் இரண்டு விஷயங்கள் அடித்தளமாக அமைகின்றன, அவை, கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி, உங்களிடம் அந்த விசயங்கள் இல்லையென்றால், உங்களுக்குச் சுதந்திர நாடு இல்லை!" என்கிறார் சல்மான் ருஷ்டி, நாம் நாடற்ற அகதிகளாக இந்தத் தேசத்தில் வாழ்கிறோமோ? என்கிற பதற்றத்தை யூதநாதனின் நாவல் உருவாக்குகிறது.
யூதநாதனுக்கு அந்த சுதந்திரம் மறுக்கப்படுகிறது. தமிழில் எழுதி என்ன ஆகப்போகிறது? சலிப்புத் தோன்றலாம், ஆனாலும் சீனிவாசன் நடராசன் தொடர்ந்து தன் நான்காவது நாவலை எழுதுகிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்த நாவல் வடிவம் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என நம்புகிறேன்.
-கரிகாலன்
Be the first to rate this book.