செந்தமிழ்ப் பாடல்களின் செவ்விய நயங்கள் முற்காலத்தில் தொகுக்கப் பெற்ற புறநானூறு, அகநானூறு முதலிய எட்டுத் தொகை நூல்களால் இனிதறியக் கிடப்பள ரங்கத்தார் காலத்திற்றிகழ்ந்த பற்பல பெரும் புலவர்களின் கவித் திறமையும், மனப்பாங்கும் அந்நூல்களாலே தெள்ளிதிற் புலனாதல்போல, பிற்கால மூவேந்தர் அலையிலும், அவர்களுக்குப் பின் தமிழை வளர்த்து வந்த வள்ளல்கள். செல்வர்கள் ஆதரவிலும் சிறப்புற்றோங்கிய புலவர்களின் எண்ணிறந்த சொற் பொருணயங்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் தொகை நூலினாலேயே நாம் தெரியலாயினோம்
முற்காலப் புலவர்கள் கருத்து நுட்பத்தையும் பிற்காலப் புலவர்கள் சொல் நுட்பத்தையும், பிற்காலப் புலவர்கள் சொல்நுட்பத்தையும் குறிக்கோளாகக் கொண்டனர். ஆதலால், இருவகையார் பாடல்களும் தமிழன்னையின் திருவடிக் சுமலங்களுக்கு உவப்பாகச் சாத்தப் பெற்ற பாமாலைத் தொகுதிகளே.
அவற்றுள் தனிப்பாடல் திரட்டுக்கு உரைகள் பல விருப்பினும், அதன்கணுள்ள பாடல்களை வரலாற்று முறைக்குத் தக்கூடிய வரிசைப்படுத்திப் பாடல்களின் பொருளை நன்கு தெளிவு படுத்திக் காட்டும் விளக்கவுரை இன்றியமையாததா யிருப்பதைக் கருதி. இந்நூலானது அத் தேவையை நிறைவேற்றும் நோக்கத்தோடு இயற்றப் பெற்றுள்ளது. இதன்க சரித்திர முறைக் கேற்றவாறு புலவர்களின் 1 வரிசை ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
Be the first to rate this book.