மழை கழுவிய பெருமழை" என நூலின் இரண்டாவது கவிதையிலேயே பெய்யத் தொடங்கிய கவிமழை, தொகுப்பு முழுவதுமே நம்மை நனைத்துக் கொண்டோடுகிறது...
இல்லையில்லை நம்மையும் இழுத்துக் கொண்டோடுகிறது. இந்நூலின் மழைக்கவிதைகள் குறித்து மட்டுமே தனியே ஓர் ஆய்வுரையை எழுதலாம். அப்படியாக நிறையவே நிறைவான மழைக்கவிதைகள். 'மழைப்பாட்டின்' ஒவ்வொரு தூரலிலும் கவிதைத் துளிர்த்துள்ளது. இந்த நான்கு வரிகளுக்குள் நெடுநேரமாய் விழுந்து கிடந்தேன் நான். பல்லாயிரமாண்டுக்கான தமிழ்க் கவிதைகளில் சற்றே வித்தியாசமான காதல்
விழுந்தடங்கிய மண்ணிலிருந்து
முளைத்தெழும் தளிருடலில்
பசலைப் பூத்திருக்கும்
தழுவிப் பிரிந்த மழை,
அனுபவத்தைத் தருவதாக 'மலர்க்காதல்' கவிதை அமைந்துள்ளது. அதிலும்
'கொலுசொலி
கிளர்ந்தெழச் செய்கிறது
உன் வாசனையை' எனும் தொடக்கமும்,
"அனையும்போது தான் தெரிகிறது
தீயின் தகிப்பு' எனும் முடிப்பு வரிகளும் என்னை ரொம்பவே ஆட்கொண்டன.
தலைப்பிடப்படாத கவிதையொன்றில்
'இது மூடிவென்றால்
தொடக்கம் எது?
இது முடிவென்றால்
தொடக்கம் அறு' என்றெழுதிய வரிகள் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்த்துவதாக உள்ளன.
'சிலந்தியைத் தின்னும் இரை' எனும் கவிதையின் நிறைவு வரிகளாக வரும்
'எச்சில் இருக்கும்வரை சிலந்தி
தின்று தீர்க்கும்வரை பூமி' எனும் வரிகள், இச்சமுதாயத்தின் அங்கமாக விளங்கும்
ஒவ்வொரு தனி மனிதனின் இருப்பையும் உணர்த்தும் வகையில் அடர்ந்த அடர்த்தியுடன்
விளங்குகின்றன.
"கூழாங்கல்லில் உரையும் புதாவின் உயிர்', 'கட்டைவிரல்', 'சனாதனம்',
'யூதான்களைக் காட்டிக் கொடுப்பார்கள்'. 'பாரத் மாதா கி ஜோ' ஆகிய கவிதைகள் இந்நூலில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகள் என்று சொல்வதை விடவும்.
சமகா அரசியலை மிகச் சரியான பார்வையோடு நேராக நின்று.
ஆட்சியாளர்களின் முகம் பார்த்துக் கேட்டும் கூரான கேள்விகளையுடைய கவிதைகள் என்று சொல்லதும் மிகப் பொருத்தமானதே. இப்படியான அசியவையும்
தெளிவுமுடைய கவிதைகளே இன்றைய காலத்தின் தேவையாக உள்ள,
Be the first to rate this book.