த ஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, கள்ளம்பட்டி கிராமத்தில் பிறந்த சுகிதா சாரங்கராஜ், மன்னை தூய வளனார் பெண்கள் மேல்நிலையில் பள்ளிக் கல்வி பயின்றார். ஆங்கில இலக்கியம் முடித்த இவர் தினமலர். சன் தொலைக்காட்சி. கலைஞர் தொலைக்காட்சி என. 18 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் பொறுப்பாசிரியராகவும் அதன் டிஜிட்டல் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் செயல்படுகிறார். அரசியல், சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சிகள் - குறிப்பாக தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்களில் நம்பர் ஒன் விவாத நிகழ்ச்சியான 'கேள்வி நேரம்' அரசியல் விவாத நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து வருகிறார். இவர் எழுதிய பாலின சமத்துவம் தொடர்பான பல்வேறு கட்டுரைகள் மற்றும் நிகழ்ச்சிகள், சிறப்புச் செய்திகள் மற்றும் நெறியாள்கைக்காக 6 முறை Laadli விருதினை தேசிய அளவில் பெற்றுள்ளார். பாலின சமத்துவம் தொடர்பான இவரது தொடர் பங்காற்றலுக்காக Laadli media fellowship, குழந்தைகள் உரிமை தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளுக்காக Unicef fellowship விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Google news initiatives நடத்தும் செய்தியின் உண்மைத்தன்மை கண்டறிவதற்கான fact checking பயிற்சி பெற்றவர். Journalism Al & The London school of political science & economics இணைந்து நடத்திய Artificial intelligence பயிற்சிக்காக உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்களில் ஒருவர் இவர்.
'ஒரு காதலும் ஒரு சொம்பு தண்ணீரும்' என்ற கவிதைத் தொகுப்பு, 'சமூகமும் தேசிய விருப்பமும்' என்ற கட்டுரைத் தொகுப்பு என இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். இவரது வாழ்க்கைப் பயணத்தை ஜோஷ் டாக்ஸ் நிகழ்ச்சியில் ஆவணப்படுத்தியுள்ளார்.
Be the first to rate this book.