எண்பதுகளின் இலக்கியப் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்த தமிழவனின் இது நாள் வரை வெளிவந்த நேர்காணல்களின் திரட்டு இந்நூல், புனைவு, கோட்பாடு, கவிதை, புலம்பெயர் இலக்கியம், அரசியல் எனப் பல விசயங்களைக் குறித்துப் பேசும் இந்நேர்காணல்களில், தமிழவன் எப்படி ஓர் ஆளுமையாக உருவாகினார் என்பதற்கான சுவாரசியமான சான்றுகள் பலவும் பல்வேறு கேள்விகள் வழி வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
தமிழ்த்துறைகள் மீதான அசலான விமரிசனம் அவற்றைப் புதுப்பிக்கத் தேவையான ஆலோசனைகள், பார்ப்பனிய முதன்மை இலக்கியப் போக்குகள் குறித்த கடுமையான எதிர்ப்பு, எனினும், க.நா.சு., மௌனி போன்றோர் மீதான அபிமானம், கட்சிசார் மார்க்சியம், திராவிடக் கட்சிகள் மீதான ஒவ்வாமை இச்சித்தாந்தங்களின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் தன் ஆய்வுகள் குறித்த பின்னணி, தேவைகள் பற்றிய பேச்சுகள் என மேல் வாசிப்பிற்கு முரண்பட்டவை போலவும், ஆழ்ந்த வாசிப்பில் தன்னை சதா புதுப்பித்துக் கொண்ட ஒரு படைப்பாளி, ஆய்வாளர் குறித்த முழுமையான சித்திரத்தைக் கொண்டவையாகவும் இத்திரட்டு அமைந்துள்ளது. நல்லதொரு முன்னுரையுடன் கூடிய பதிப்பாக சண்முக. விமல் குமார் கொண்டு வந்துள்ள இந்நூலைப் படிக்கும் போது, தமிழவனோடு நேரில் பேசிய நிறைவு கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.
Be the first to rate this book.