இந்த நூல் தமிழகத்தில் வெற்றிலை பயன்பாடு மற்றும் கொட்டைப்பாக்கு வணிகம் போர்ச்சுக்கீசியர்களும் டச்சு நிறுவனமும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் நடத்தியது பற்றி தெரிவிக்கிறது. மெல்லுவதும் புகைக்கும் பொருளுமான புகையிலையை ஸ்பேனிஷ் மணிலாவிலிருந்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது மற்றும் இறக்குமதி வணிகம் (1669-1800) செய்தது பற்றி விவரிக்கிறது. சீனாவிலிருந்து தேயிலை இறக்குமதி வணிகம் மற்றும் தேநீர் குடித்தலும் (1644-1784), அரேபியாவின் ஜெட்டா மற்றும் மோக்கவிலிருந்து காப்பிக்கொட்டை வர்த்தகம் மற்றும் காப்பி குடித்தலும் (1727-1761) பற்றி எடுத்துரைக்கிறது. உள்ளூர்வாசிகளும் ஐரோப்பியர்களும் கள், சாராயம் குடித்தது (1545-1877). டேனிஷ், பிரெஞ்சு, டச்சு நிறுவன சாராய வணிகம் செய்தது (1644-1775), பீர் மற்றும் சாராயம் வடிப்பதற்காக ஜகார்த்தாவிலிருந்து செய்த சக்கரை வணிகம் (1647-1775), பல வகையான ஓயின்களை ஐரோப்பியர்கள் இறக்குமதி செய்தது. கோன்யக் பிராந்தி, ஜின் போன்றவை பீப்பாய்களிலும் புட்டிகளிலும் கொண்டு வந்தது, மெதியிரா ஒயினை பிராந்தியில் கலந்து மதுகுடித்தலில் மாறிய நாகரிகம் பற்றி விளக்குகிறது. இங்கிலாந்து, ஜெர்மனியிலிருந்து திடமான பீர் மற்றும் கார பீர் கொண்டு வந்தது. ஜகார்த்தா கோவாவிலிருந்து ரம் கொண்டு வந்தது. மதுகுடித்தல் கலாச்சாரமும், மதுஅருந்தும் விடுதிகளும், படைவீரர்களின் குடிபோதையும், ஆங்கில நிறுவனம் குடிகார வீரர்களுக்காக நூலகம் அமைத்தது (1677-1883) பற்றி குறிப்பிட்டு, காலனிய நுகர்வு மற்றும் பண்பாட்டால், ஏற்பட்ட தாக்கம் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
Be the first to rate this book.