இது மொழிப் பிரச்சினை அல்ல - இது ஆதிக்கப்பிரச்சினையே தவிர மொழிப் பிரச்சினை அல்ல... நாம் எந்த அளவிற்குப் பணியத் தயாராக இருக்கிறோம் என்பதைக் கண்காணிப்பதற்காக -அளவிடுவதற்காக, அரசியல் ஆதிக்கக்காரர்கள், அரசியல் சூழ்ச்சிக்காரர்கள், ஏகாதிபத்திய வெறி கொண்டவர்கள், தங்களுடைய மொழியைத் திணித்து இதைத்தான் நீ ஆட்சி மொழியாகக் கொள்ளவேண்டும். இதிலேதான் பாடங்கள் நடக்கும். இதிலேதான் தேர்வுகள் நடக்கும். இதிலேதான் சட்டங்கள் இயற்றப்படும். இந்த மொழியில் தான் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். இது தெரிந்தால் இங்கெல்லாம் வா -இது தெரியாவிட்டால் நீலகிரித் தோதுவர்களைப் போல், குருவிக் காரர்களைப் போல், ஆப்பிரிக்க நாட்டு நீக்ரோக்களைப் போல், நீயும் உன்னுடைய நாட்டோடு, கூட்டோடு, இரண்டாந்தரக் குடிமகனாய். மட்டரகமான மனிதனாய், ஏனோ தானோவாய், எடுப்பார் கைப்பிள்ளையாய் அடங்கிக் கிட என்பதுதான் இதன் உட்பொருளாகும்.
-- அறிஞர் அண்ணா
தமிழ் ஆராய்ச்சி மாணவர். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் சமய உருவாக்கம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழ்ச் சமூகத்தில் சமய வரலாற்றில் மட்டுமில்லாமல், தத்துவச் சிந்தனை வரலாற்றிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகின்றவர்.
Be the first to rate this book.