இவரைப் போல் புகழ்பெற தோன்ற வேண்டும், இல்லையென்றால் தோன்றாமலேயே இருக்க வேண்டும். தலைவனின் வெற்றி வெறும் கை வீசி வந்ததல்ல. உழைப்பு.. உழைப்பு.. அத்தைனையும் அரும்பெரும் உழைப்பு.
பள்ளிப் படிப்பைப் தாண்டியதில்லை. பல்கலைக் கழகங்களை பாத்தவரில்லை. ஆயினும், அவர் சிந்தையில் மட்டும் எப்படி இந்த செந்தமிழ்த் தேன்கூடு கட்டியது.
தமிழைத் தாய்ப் பாலாய் குடித்து வளர்ந்த தலைவன். விந்தைமிகு மனிதர். விசித்திரமானவர் என்று சொல்லிக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.
வெடிகொண்டு மலைதனை சிதைக்கலாம். எதைக்கொண்டும் தலைவனின் புகழைச் சிதைக்க முடியாது.
கையெடுத்து கடவுளை கும்பிடாதவர் கலைஞர். ஆனாலும் தமிழ் மக்களுக்கு அவரே என்றும் கைதொட்டுக் கும்பிடும் கற்பூரமாவார்.
Be the first to rate this book.