'தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்' என்னும் இந்நூல், பாண்டிய நாட்டு வரலாற்றைச் சுருக்கமாக அறிவிப்பதோடு, தமிழ் மொழியிலுள்ள சங்க நூல்களுள் ஒன்றான புறநானூற்றைக் கற்பதற்கும் வாயிலாக அமையும் முறையில் எளிய நடையில் இயற்றப் பெற்றுள்ளது.
வரலாறும் இலக்கியமும் இணைந்து பிணைந்து நிற்பவை. வரலாறு தெரிய இலக்கியம் வேண்டும். இலக்கியத்தை நல்லமுறையில் தெரிந்துகொள்ள வரலாறு வேண்டும். மாணவர்கள் தமிழக வரலாற் றையும் தமிழ் இலக்கியத்தையும் கற்க, இந்நூல் தூண்டுகோலாக இருக்கக் கூடும் என்று கருதுகிறேன்.
Be the first to rate this book.