பரணி என்பது தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பரணி இலக்கியம் பெரும்பாலும் மன்னரைப் போற்றிப் புகழ்ந்து பாடப்படுவதாகும்.
"ஆயிரம் யானை அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி' என்பது பரணி நூலுக்கு இலக்கணம் ஆகும். அதாவது ஆயிரம் யானைகளைப் போரில் வெற்றி கொண்ட மாவீரனைப் போற்றிப் பாடுவதே பரணி. 'பரணி' என்பது 'பரணி' நட்சத்திரம் வருகின்ற நாளில் பேய்கள் எல்லாம் கூடி. நிணச் சோறு ஆக்கித் தின்று மகிழ்வதைப் பாடலில் கூறுவது என்றும் கூறுவார்கள். போர்க் களத்தில் பரண் ஒன்று அமைத்து, அதன்மீது அமர்ந்துகொண்டு போர்க்களக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே பாடுவது பரணி என்றும் கூறுவார்கள்.
"தக்கயாகப் பரணி" என்பது சிவபெருமானை அவமரியாதை செய்யவேண்டுமெனத் தக்கன் இயற்றிய வேள்வியைச் சிதைத்து, அவ்வேள்விக் களத்தையே போர்க்களமாக்கிய மாவீர் வீரபத்திரரின் வெற்றிச் செயல்களைப் பாடுவதாகும்.
Be the first to rate this book.