திகட்டாத தேன்மிட்டாய்!
மாயாபஜாரில் இளம் வாசகர்களுக்கு ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கும் மருதனின் எழுத்துகளைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய உள்ளன. எந்த ஒரு சிறிய விஷயத்தையும் எடுத்துக்கொண்டு, அதைத் தன் அபாரமான கற்பனைத் திறனால் அற்புதமான எழுத்தாக மாற்றிவிடும் வல்லமை மருதனுக்கு உண்டு. இவரின் எழுத்துகள் மூலம் நமக்கு அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நபர் அல்லது விஷயம் அல்லது கதை மீது அளவு கடந்த ஆர்வமும் மரியாதையும் வியப்பும் ஏற்பட்டுவிடுகின்றன.
கட்டுரைகள் அனைத்தும் அன்பையும் அமைதியையும் நட்பையுமே போதிக்கின்றன. அகிம்சையையே வலியுறுத்துகின்றன. நல்ல செயல்களையே ஆணித்தரமாக எடுத்து இயம்புகின்றன. எளியவர்களிடம் அன்பையும் இரக்கத்தையும் காட்டி அரவணைக்கச் சொல்கின்றன.
Be the first to rate this book.