வரும் முன் காத்தல் என்பது அறிவார்ந்த ஒரு கோட்பாடு. உடல்நலத்துக்கு அது மிகவும் பொருந்தும். தொற்று நோய்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு மிக முக்கியமாக உதவி செய்வன தடுப்பு மருந்துகளே! உரிய சமயத்தில், தேவைப்படும் தடுப்பு மருந்துகளைத் தக்க இடைவெளியில் செலுத்திக்கொள்வதன் மூலம் பல கொடும் நோய்கள் நம்மை அண்டாமல் பாதுக்காக்கலாம்.
'நோய் நாடி. நோய் முதல் நாடி. என்றாரே வள்ளுவர் அதற்கேற்ப
சில முக்கியமான கொடும் நோய்கள் எவை. அறிகுறிகள் என்ன, எப்படிப் பரவுகின்றன, தடுக்கும் வழிகள் என்ன என்ற பயனுள்ள குறிப்புகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
அது மாத்திரம் அல்லாமல், நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் தடுப்பு மருதுகள் பற்றியும் அவற்றைக் கண்டுபிடித்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பற்றியும், தடுப்பு மருந்துகளை உருவாக்க அவர்கள் பட்ட பாடுகளையும் விரிவாகப் பேசுகிறது இந்த நூல்.
Be the first to rate this book.