பிரெஞ்சு இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள் என்று நூறு பேர்வழிகளுக்கு மேல் பெயர் சொல்லியாகவேண்டும். இந்த நூறு பேர்வழிகளில் மதிப்புக்கு ஏற்றபடி வரிசைப்படுத்தினால் முதல் வரிசையில் அதாவது முதல் பத்துப்பேர் வழிகளுக்குள் இருப்பார் “தபால்காரன்” என்கிற இந்த நாவலின் ஆசிரியரான ரோஜர் மார்ட்டின் தூ கார்டு.
அவருடைய மேதைமையின் உச்சிக் காலத்திலே அவர் எழுதிய நூல் “தபால்காரன்” என்னும் இந்த நாவல். ஒரு பிரெஞ்சு கிராமத்தின் வாழ்க்கைச் சித்திரம் என்று அவர் குறிப்பிடுகிற இந்த நாவலில் தூ கார்டின் இலக்கிய மேதைமை பூராவும் காணக்கிடக்கிறது. மிகவும் பல பாத்திரங்களை, லேசாக ஆனால் பூரணமாக உருவாக்கி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தூ கார்டு. கிராமத்து வாழ்க்கை என்னும் சரடும், தபால்காரன் ழாய்னுவும் இந்தக் கிராமத்து மக்களைப் பிணைத்துத் தருகிறார்கள் நமக்கு. கிராமத்து வாழ்க்கையைப் பற்றி ஆஹா ஊஹூ என்று புகழாமல், அந்தோ பரிதாபம் என்று துயரம் உண்டாக்காமல் எழுதப்பட்டிருக்கிற நூல், உலக இலக்கியத்திலேயே இது ஒன்றுதான் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
- க.நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.