புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' நூலிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற வல்லிக்கண்ணன் தீபம், எழுத்து, சரஸ்வதி இலக்கிய ஏடுகளின் பங்களிப்பை பதிவு செய்துள்ளதோடு, அமரவேதனை, நினைவுச்சரம் போன்ற குறிப்பிடத்தக்க, கதை. கவிதை, நாவல், கட்டுரை என இலக்கியத்தின் சகல வடிவங்களையும் கைக்கொண்டவர். தாமிரபரணி நதியைப் போல எளிமையாய் இயங்கிய வல்லிக்கண்ணன் அறியாதது இன்றைய இலக்கிய உலகின் ஆர்ப்பாட்டங்களும், மார்தட்டல்களும். சாகித்ய அகாதமிக்காக புதுமைப்பித்தனின் வரலாற்றை எழுதியுள்ள வல்லிகண்ணன் புதுமைப்பித்தனின் சமகாலத்தவரும் கூட இன்று எண்பதுகளைத் தொடும் இந்த இராஜவல்லிபுரத்துக்காரர் அமைதியாய் சாதித்துள்ள சாதனைகளுக்குக்கான சான்றுகளில் ஒன்றுதான் இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.