கோழிப்பாளையம் கிராமத்தில் தோட்டம் காடு வைத்திருக்கும் நான்கு முதிர்வயது நண்பர்களுக்கு மேலும் வயது ஏறிக்கொண்டே இருக்க அவர்களுக்கு மணமகள் என்றொருத்தி குட்டியாக்கரணமடித்தும் கிட்டியபாடேயில்லை. இதனால் அவர்கள் படும் வேதனைகளை சொல்லும் கதையாகவும், திருமண அமைப்பாளர்களிடம் இவர்கள் படும் சிரமங்களையும் கொண்டு இது நகர்கிறது. பின்பாக அவர்களில் இருவர் திருமணம் செய்தும், என்ன சம்பவம்தான் இந்த மண்ணில் அரங்கேறுகிறது என்பதை கண்கூடாகப் பார்த்து புனையப்பட்ட புத்தகமிது. மேலோட்டமாகப் பார்த்தால் கட்டிக்க பொண்ணு கிடைக்கலை" என்பதெல்லாம் ஒரு பிரச்சனைக்குரிய விசயமா? என்றே தோன்றலாம். இது இந்த மண்ணில் தலையாய பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது என்பது வேதனைதான்.
Be the first to rate this book.