தாழ்வரை..கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் முதல் நாவல். சுதந்திரப் போராட்டத் தியாகியான தாத்தாவிற்குக் கிடைத்த நிலம் அது. தியாகிகள் என்றால் உயிரைக் கூட துறக்க நினைத்தவர்கள் என்றுதான் நினைவு கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட எதிர்பார்ப்பில்லாத தியாகத்திற்கு இலவசம் என்ற பெயரில் சாலைகள் இல்லாத உடனடியாகப் பயன்படுத்த முடியாத ஒரு நிலத்தை மேட்டாங்காடாகக் கிடந்த கோதை மலை அடிவாரத்தில் ஒதுக்கிய அதிகாரிகளின் மெத்தனத்தையும், பாதைகள் இல்லாததால் வெகுதூரம் நடந்து சென்று கல்வி பயின்ற சின்னஞ்சிறு கால்களின் நினைவுத் தடங்களையும், பால்ய நட்பின் ஆழத்தையும், உறவுகளின் சுயநலத்தால் கைவிட்டுப் போய் திரும்பப் போகவே முடியாத அந்த நிலத்தோடான உறவையும் ஒரு நதி போன்ற சொற்பிரயோகத்தோடு நகர்த்திச் செல்கிறது இந்நாவல். குறிப்பாக எந்த ஒரு நிலமோ, வீடோ, அவசரத் தேவைகளுக்காக நாம் அவற்றை விற்க நேர்ந்தால் அதனால் ஏற்படும் பேரிழப்புகளையும், பின் விளைவுகளையும் ஒரு பாடம் போலத் தாழ்வரை பதிவு செய்திருக்கிறது. நிச்சயமாக இந்த நாவல் ஒவ்வொருவருக்குள் மீந்து கிடக்கும் சுவடுகளின் மீது ஒரு சொட்டு மழையையாவது உதிர்க்கும்.
பதிப்பாசிரியர்
Be the first to rate this book.