நீங்கள் இருக்கும் வீடு அல்லது நீங்கள் வாழும் நகரம் உங்களின் கண் முன்னால் அழிக்கப்படுவதும் உங்களோடு இருந்தவர் கொலையுண்டு போவதும் போர். சிதைவுகளோடு வாழ நேர்வது போருக்குப் பிந்திய வாழ்க்கை. இரண்டுக்குள்ளும் வாழ எத்தனிப்பதே மனித முயற்சியும் மனித மனம் கொண்டுள்ள பெருந்தாகம் ஆகும். இந்தக் கதைகள் போருக்குப் பிந்திய வாழ்க்கையின் உள் - வெளித் தோற்றத்தையும் அவற்றுக்குள் நிகழும் ஆன்மாவையும் குறுக்கும் மறுக்குமாகப் பேச விளைகின்றன. போரின் கதைகளை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். போருக்குப் பிந்திய வாழ்க்கை,‘போர் முடிந்து விட்டது; அமைதி பிறந்து விட்டது’ என்ற தோற்றத்துக்கு அடியில் ஆறாத தணலாக நிறைந்திருக்கும் இன்னொரு வெம்மைப் பிராந்தியத்தில் நிகழ்வது. ஆம், வாழ்க்கை இப்படியும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும்போது உடலும் மனதும் பதறுகின்றன.
Be the first to rate this book.