நண்பரும் பிரபல எழுத்தாளருமான வா.மு.கோமு அவர்கள் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சென்றிருந்தேன். நாவலை அவரிடம் கொடுத்து விட்டு நேரம் வாய்க்கும்போது இந்த நாவலை வாசித்துப் பாருங்கள். உங்களின் அபிப்ராயத்தையும் சொல்லுங்கள் என்று கூறினேன். அடுத்த நாள் மாலை ஒரு ஆறு மணியளவிற்கு தொலைபேசியில் அழைத்தார். “எனுங்க வணக்கமுங்க. நாந்தாங்க. கதை அருமைங்க. ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன்” என்று பட்டென்று சொன்னார். அதை உள்வாங்கிக் கொள்ளவே முடியாமல் இருந்த போது மேலும் சொன்னார். “இன்னைக்கு மத்தியானம் சாப்பிட்டு முடிச்சுட்டு ஒரு ரெண்டரை மணிக்கு ஆரம்பிச்சேன். முடிச்சுட்டு உடனே கூப்டறேன் பாருங்க. ம்… அந்த மாடசாமி கேரக்டர் கலக்குதுங்கோ. மொத்தத்தில நல்லா வந்திருக்கு, அருமை. சூப்பர்.
Be the first to rate this book.