ஆரிய தர்மா என்கிற வர்ணத்திற்கு எதிராகத் தமிழின் அறம் என்கிற நிறமே எதிர்த்து நிற்பதாக உள்ளது என்பதைத் தொல்காப்பியம், திருக்குறள் என்ற இரண்டு தமிழின் ஆதிப்பிரதிகள் வழியாக வலுவான கருத்தியல் தொகுப்புகளுடன் முன்வைக்கிறது இந்நூல். அந்த அடிப்படையில் இந்த நூல் அவரது தமிழியம் சார்ந்த பிரகியாக்க அரசியலை ஆகச்சரியாக முன்வைப்பதாக அமைந்துள்ளது.
-ஜமாலன்
'திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய இருநூல்களும் வைதிகமரபில் மேற்கொள்ளப்பட்ட தொகுப்பு, உரை எழுதும் மரபு, புகழ்மாலை எழுதும் மரபு,பதிப்பு மரபு, ஆராய்ச்சி மரபு என அனைத்து நிலைகளிலும் தம் கவனத்திற்கு உட்படுத்தி, அவை எந்தெந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டன? அவர்களின் கருத்தியல் சார்பு நிலைக்கும், அவர்கள் பிரதிகளை அணுகிய முறைகளுக்குமான உறவில் தமிழ்மரபும் ஆரியமரபும் எவ்வாறெல்லாம் தொழிற்பட்டன என்பதை விரிவான சான்றாதாரங்கள் மூலம் பொதியவெற்பன் கட்டமைக்கிறார்.
-வி.அரசு
Be the first to rate this book.