பல்லாண்டு காலமாக ஆடற்கலையின் மாணவியாக, ஆசிரியராக, விரிவுரையாளராக, ஆய்வாளராக, நடன, நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவரின் ஆய்வு நூலிது. இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஏற்பட்ட எழுச்சி கலைகளின் திசையையும் மாற்றியது. தேசிய எழுச்சிபெற்ற மக்கள் தமது பாரம்பரியத்தைத் தேடி ஆராய்ந்தனர். அதற்குப் புத்துயிரும் கொடுத்தனர். அதைத் தொடர்ந்தும் ஆடற்கலை பல்கிப் பெருகும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். உயரிய மட்டத்தில் இருந்த ஆடற்கலை இன்று பாடசாலைப் பாடமாக, பல்கலைக்கழக ஆய்வாக மாறிவந்துள்ளது. அவ்வகையில் ஆடற்கலையின் வரலாற்றை ஆய்வு நோக்கில் விவரிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.