தஞ்சை வண்டல் மண்ணின் வளமிக்க மன்னார்குடி நகரைச் சேர்ந்தவர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பலநிலைகளில் பல ஊர்களில் 37 ஆண்டுகள் பதவி வகித்து பிழையற்ற பணியின் சொந்தக்காரர்.
கவிஞர், கல்லூரிக் காலம் தொட்டு கவிதை படைத்தவர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். பணியாற்றிய வங்கிக்கென விளம்பரக் குறும்படங்கள் தயாரித்தவர். பேச்சாளர், பணி ஓய்வுக்குப் பின் மதுரை திருவள்ளுவர் மன்றத்தில் 2011 ஆம் ஆண்டு "சங்க இலக்கியம்" பற்றிப் பத்து நாட்கள் தொடர் சொற்பொழிவு ஆற்றியவர்.
பாடலாசிரியர், "அடிடா... அடிடா.. தமிழ்ப் பறையை" என்னும் இவர் எழுதிய ஏழு இசைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் "தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு" மற்றும் 'உலகத் தமிழர் பேரமைப்பு" 9ஆ ம் மாநாட்டில் 2017-ல் தஞ்சையில் வெளியிடப்பட்டது. 2021-இல் சங்க இலக்கியம் காட்டும் "தமிழ் முருகன்" குறித்து பாடல் எழுதி அரங்கேறியது.
Be the first to rate this book.