தமிழர் புலம்பெயர்வு பற்றிய வரலாறு, அவர்களது சமூகப் பொருளாதார பண்பாட்டுக் கூறுகள், இன்றைய வாழ்க்கை நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி நூல் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரையும் சென்றடைந்து பயனளிக்கட்டும்.
-மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர்
இளிவரும் காலங்களில் அறிவியல் பார்வையுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எனது அவாவை பதிவு செய்து, தமிழர் புலப்பெயர்வு உலகலாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு என்ற இந்நூலை நமக்கு வழங்கியுள்ள முனைவர் க.சுபாஷிணி அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
-மாண்புமிகு திரு.செஞ்சி மஸ்தான்
அமைச்சர், வெளிநாடுகள் வாழ் தமிழர்கள் நலன் தமிழ்நாடு அரசு
தமிழர்களின் வாழ்வியல் மற்றும் அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் மீதான புதிய பார்வையை இந்நூல் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. உலகளாவிய தமிழ் மக்களின் புலம்பெயர்வுக்கான காரணங்களை விரிவாக நம் கண் முன்ளே கொண்டு வந்து சேர்க்கின்றது இந்த ஆய்வு நூல்.
-மாண்புமிகு திரு.செந்தில் தொண்டமான்
ஆளுநர்.கிழக்கு மாகாணம், இலங்கை
எப்போதும் நமது முன்னோர்களின் புலம் பெயரும் ஆற்றல் பற்றி நாம் மிகக்குறைவாகவே மதிப்பிடுகிறோம். நாம் எதிர்ப்பார்ப்பதைவிட மிக அதிகமாகவும் வேகமாகவும் நமது முன்னோர்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார்கள். நாமும் இப்போதும்கூடத் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மனித வரலாற்றின் தவிர்க்க முடியாத தப்பிக்க இயலாத எதார்த்தத்தின் வலி மிகுந்த சில பக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர்.
-ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு)
சிந்துவெளி ஆய்வாளர்
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பெற்றோர்களுக்கு மலேசியாவில் பிறந்தவர் உயர் ஸ்விக்காக ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் பணியாற்றி வருகின்றார். இவர் 2001ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட தமிழ் மரபு அறக்கட்டளை பட்டு அமைப்பு என்ற வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளும் அமைப்பின் தோற்றுநராகவும் அதன் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார்யம் ஆண்டுகளாக உலகின் பல்வேறு வரலாற்றுப் பகுதிகளுக்கு நேரில் சென்று களப்பணிகள் நிகழ்த்தியவர். இவரது ஆய்வுத்தரவுகள் ஆய்வு நூல்களாகவும் ஆய்வுக் கட்டுரைகளாகவும் வெரிவத்துள்ளன. இவரது நூல் "ஜெர்மன் தமிழியல் நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை"என்ற நூல் 2016ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த ஆய்வு அலுக்கான பரிசைப் பெற்றது (2020) என்பதோடு ஆசிரியரின் மெட்ச 1726 Publishing Next Industry Award 2012 சிறந்த இந்திய மொழி நூலுக்கான ஆம் பரிசு பெற்றது.
Be the first to rate this book.