உணர்வை உலுக்கும் உதாரணங்களை உணர்ச்சிவசப்படாமல், காலந்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கோபப்படாமல் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் நிதானத்துடன் மேற்கோள் காட்டி நிரூபிப்பது இந்தப் புத்தகத்தின் பலம்.
- வாஸந்தி, இந்தியா டுடே, ஏப்ரல் 1998
தமிழ்ப் பெண்ணைக் குழந்தை நிலை முதல் வரும் பல்வேறு சமூகநிலைகளில் வைத்துப் பார்த்து இறுதியில் துறவுடன் நிறைவு செய்யும் இந்த நூலின் மிகுந்த பலமாக அமைவது, வடமொழி வழி தெரியும் நடவடிக்கைகளையும் விவரித்தும் விவாதித்தும் செல்வதே. ஆசிரியருக்கு சமஸ்கிருத பாளி நூல்களில் உள்ள தாடனம் நன்கு புலனாகிறது.
- கார்த்திகேசு சிவத்தம்பி, தாமரை, டிசம்பர் 97
மேடை நாடகக்கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிப்புப் பயிற்சியாளர், துணை இயக்குனர், திரைப்பட வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், இயக்குனர், கதைசொல்லி, சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முகத் திறனராகத் திகழும் ரெ.விஜயலெட்சுமி ஒரு தீவிர வாசிப்பாளரும்கூட. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' என்னும் தொடரின் கதாபாத்திரங்கள் இவர் எழுதும் வசனங்களைப் பேசுகிறார்கள்.
தேன்கூடு என்ற யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் சேனல் வழியாக சுமார் 200க்கும் மேற்பட்ட இலக்கியம் சார்ந்த நூல்கள் குறித்த அறிமுகத்தை, காணொளிப் பதிவுகளாக வெளியிட்டு தீவிர வாசகர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்வதோடு, எழுத்தாளர் களையும் பெருமைப்படுத்தி பெருமைப்படுக்கி வருகிறார்.
Be the first to rate this book.