தமிழ்நாட்டின் கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அனைத்து அசைவுகளையும் ஆழமாகப் பதிவு செய்யும் முதல் பெருநூல்!
ஓமந்தூரார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என்று காலவரிசையிலான ஆட்சி அரசியல் தொடங்கி குலக்கல்வி, மொழிப்போர், கச்சத்தீவு, மாநில சுயாட்சி, சமூகநீதிப் போராட்டம், காவிரி நீர்ப்பங்கீடு, ஈழத்தமிழர் பிரச்னை, சர்க்காரியா கமிஷன், சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட சமூக அரசியல் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகளின் மெய்யான அரசியல் பின்னணி வரை அனைத்தும் நுட்பமாகவும் தீர்க்கமாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, விசிக, பாஜக, தேமுதிக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கதை விரியும்போதே திராவிடம் - தேசியம் - இந்துத்வம் உள்ளிட்ட கருத்தாக்கங்களும் கவனத்தோடு விவாதிக்கப்பட்டுள்ளன.
அரசியலை வரலாற்றோடு இணைத்து ஆர்.முத்துக்குமார் முன்னெடுக்கும் ஆய்வு அன்றைய காலத்தை மட்டுமல்ல, இன்றைய களச்சூழலையும் கச்சிதமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.
Be the first to rate this book.