இந்த நூல் இடைக்கால சமயத் தொடர்பு முதல் புத்துலகக் கால சமூக இலக்கியம் வரை தமிழ்ப் புலவர்கள் மற்றும் செய்யுள்களின் வளர்ச்சி பற்றி விளக்குகிறது. தமிழ்ப் புராணச் செய்யுள் இலக்கிய வடிவம், சைவ, வைணவ அடையாளங்கள், தமிழ்த் தலபுராணச் செய்யுள்களின் விரிவாக்கம், செயல்பாடு மற்றும் 16-19ஆம் நூற்றாண்டுகளில் பரவலானது, புலவர்கள், மன்னர்கள் மற்றும் தமிழ்ச் சமூக செய்யுள்களின் முகப்புக்கூறு மாறுபாடுகள் நடந்தது பற்றி விவரிக்கிறது. ஏசுசபையார், லூத்தரன்கள், கிறித்தவப் புலவர்கள் 1715 முதல் 1900 வரை எழுதிய செய்யுள்கள், கையெழுத்துப் படியிலிருந்து தமிழில் அச்சிட்டது பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆவணச் சான்றுகள் வாயிலாக இந்நூல் தமிழ்ச் செய்யுள் வரலாற்றின் புதிய பரிமாணங்களை அறிவிக்கிறது.
Be the first to rate this book.