எண்ணிப் பார்க்கும் சிந்தனை ஆற்றலும் துணிச்சலும் இல்லாத மக்கள் ஏற்றிட முடியாத உண்மைகளைப் பெரியார் கூறிச் சென்றாலும் காலத்தினால் விளையும் மாற்றங்களால், விஞ்ஞான வளர்ச்சியால், புதுமைக் கண்டுபிடிப்புக்களால், சூழ்நிலைகளால் எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்றிட வேண்டியதாகும் மாறுதல்களையே அவர் பகுத்தறிந்து உரைத்தார் என்பதால் அவற்றில் பலவற்றைச் சிந்தித்து ஏற்காதவரும் நடைமுறையில் ஏற்கும் காலம் வரத்தான் செய்யும்.
காலத்தின் கண்ணாடியாக அவரது உள்ளமும், காலத்தின் முன்னோடியாக அவரது உரையும், காலத்தின் தேவையாக அவரது உழைப்பும் அமைந்திருந்தன. எனவே வருங்காலம் அவர் பக்கமே! அவர் பரப்பிய பகுத்தறிவின் பக்கமே! ஆனால் இடையில் எத்தனையோ சோதனைகளும், வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றனவே எனில் அதுதான் உலகத்து இயற்கை. அவற்றை வென்றிடும் முயற்சியில்தான் பகுத்தறிவே உரம் பெறுகின்றது. இயக்கம் வளருகின்றது.
-புத்தகத்திலிருந்து.
Be the first to rate this book.