கால்டுவெல்லின் காலத்தில் உலகெங்கிலும் நிலவிய மொழியாய்வுப் போக்குகளை ஒட்டியே அவரும் மொழி ஆய்வுகளைச் செய்தார். அரிதின் முயன்று, ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றி, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலைத் தந்துள்ளார்.
மேளாள் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்
திராவிட மொழிகளில் தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்றவை மிகுதியாகச் சமஸ்கிருதச் செல்வாக்குக்கு ஆட்பட்டு சமஸ்கிருத மயமானவை அதனால் அவை சமஸ்கிருதக் கலப்பின்றித் தனித்தியங்க இயலாதவை என்றும் தமிழ் அதற்கு மாறாகத் தமிழ் தன் தனித்தமை இழக்காமல் வடமொழித் தாக்கதிற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே ஆட்பட்டதால் அது தன் தனித்தன்மையை இழக்காமல் தன் தனிவளங்களைக் கொண்டே தனித்து நிற்கும் வல்லமை பெற்றது என்றும் கூறினார்.
பேராசிரியர் கி.நாச்சிமுத்து
கால்டுவெலின் நூல் "பொந்திடை வைக்கப்பட்ட அக்கினிக்குஞ்சு" போல, அதுவரை தாங்களாகவே தங்களுக்குக் கட்டமைத்துக் கொண்ட மாயத் தோற்றம் எனும் ஆரியக்காட்டினை நெருப்பேற்றியது. வெந்து தணிந்தது காடு. இன்று கால்டுவெலைச் செரிக்க இயலாது உடல் உபாதைகளாலும், வயிற்றுக் கோளாறினாலும், தவிப்போருக்குத் தங்களது ஏகபோக உரிமையைக் கேள்விக் குறியாக்கிய கால்டுவெல் எனும் பன்முக ஆளுமையை, அக்கினிக் குஞ்சினை, ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கின்றனர்.
பேராசிரியா E.ஜேம்ஸ் R. டேனியல்
Be the first to rate this book.