தனக்கு முன்பு வழக்குப் பெற்றுள்ள கருத்துகளின் வன்மை மென்மைகளை ஆய்வுக்கு உட்படுத்துகையிலும் மூத்த அறிஞர் கருத்தை மறுக்கையிலும் உறுதிப்பாடுடைய தன்முனைப்பற்ற சொல்லாடல்களை இந்த நூலாசிரியர் பல இடங்களில் கையாண்டுளார்.
இந்த நூலில் இடம்பெறும் பேருழைப்பிலான கருத்துகளை எதிர்கால ஆய்வாளர்கள் மறுஆய்விற்கு உட்படுத்தலாம். கூடுதல் தரவுகள் வழி ஏற்கலாம் மறுக்கலாம். ஆனால் அது, இந்தநூல் ஆட்கொண்டுள்ள பேருழைப்பையும் இந்தநூலில் கையாளப் பட்டுள்ள உள்ளார்ந்த ஆய்வியல் முறையையும் தழுவியதாகவே அமையும் என்பதனை இந்தநூல் சொல்லாமல் சொல்கிறது.
இந்த நூலாசிரியர் முனைவர் மு. கற்பகம் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
- இரா.அறவேந்தன்
Be the first to rate this book.