ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!
கண்டறிவாய்! எழுந்திருநீ! இளந்தமிழா,
கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை
அனைத்தையும்நீ படைப்பாய்!
இந்நாள் தொண்டுசெய்வாய்!
தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே! உயர்தமிழ்த்தாய்
இந்நிலத்தில் அடைகின்ற
வெற்றியெலாம் உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திருத்!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.