மூத்த குடியினரான தமிழினத்தின் தொன்மைக்கு தமிழிசையின் தடங்கள் அழியாதவாறு காக்கப்பட்டன. தமிழிசையின் மூலவேர்களின் மூலங்கள் கண்டறியப்பட்டன. ஒரு மாபெரும் இயக்கத்தின் எழுச்சி அலை அலையாக எழுத்து இன்று புதிய வடிவம் பெற்றுப் புத்துணர்ச்சியுடன் பொலிவுற்றுத் திகழ்கிறது. இந்த இயக்கத்திற்காக நிலம் திருத்தியோர். விதை நட்டோர், நீர் பாய்ச்சியோர், உரமிட்டவர்கள், களை எடுத்தவர்கள், கண்ணீர் சிந்திக் காத்தவர்கள் அனைவரும் என்றும் நம் வணக்கத்துக்குரியவர்கள். இப்பேரியக்கத் தேரினைப் பெருமையுடன் இழுத்து வந்தோர் பலர். பெயரும் தெரியாத பெருமக்கள் எத்தனையோ பேர். அனைவரும் நம் நன்றிக்குரியவராகின்றனர். காலத்தின் கவடு அழியாது காப்பது நம் கடமை என்று கருதி இப்பெருநூலை இயற்றும் திருப்பணியினை அறிஞர் இளங்குமரனாரிடம் ஒப்படைத்தோம்.
தமிழே மூச்சாக பேச்சாகக் கொண்டு வாழும் அறிஞர் இந்நூலினை உருவாக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார் பெரிய திட்டத்துடன் நீடு உழைத்தார்கள். ஐம்பதாண்டு வரலாற்றினையும் அணு அணுவாக ஆராய்ந்தார்கள். இவ்வியக்கத்தின் பன்முக நலன்களைத் தெளிவாக உணர்த்தார்கள். உணர்ந்த வண்ணம் உயர்ந்த நூலாக வடித்துள்ளார்கள், ஓர் இயக்கத்தின் வரலாறாகக் கொள்லாமல், ஓர் இன எழுச்சியின் வரலாற்றுக் காவியமாக இதனை உருவாக்கியுள்ளார்கள். இயக்கம் எழுந்த கதையினையும் வளர்ந்த கதையினையும் விடியல் கண்ட வரலாற்றையும் பட்டயமாக்கி யுள்ளார்கள். அடிப்படைச் சான்றாதாரங்களைத் தொகுத்துக் கல்வெட்டாக்கியுள்ளார்கள். தமிழிசை இயக்கம் பந்திய ஆதாரப்பூர்வமான முழுமையான முதல்நூலாக இது திகழ்கிறது.
Be the first to rate this book.