குறிக்கோளைக் கூறுவது எளிது! ஆனால், அதை அடையுமாறு நாட்டைக் கொண்டு செலுத்துவது எளிதன்று. அப்படிப்பட்ட அரிய குறிக்கோள் நோக்கி நடைபோடவல்ல உறுதி படைத்த, கொள்கைத் தெளிவு படைத்த, எதிர்ப்புக் கண்டு மலைக்காத, எடுத்த அடி பின்னிடாத, தொடரும் பணியில் துவளாத. இடர்ப்பாட்டுக்குத் தளராத, விடாமுயற்சியுடன் செயற்படக் கூடிய, மதிநுட்பம் நூலோடு உடையராய், பட்டறிவும் வாய்ந்தவராய், நாடு அறிந்த தலைமகனாய் விளங்கும் தகுதியுடையவர் வேறு எவர்? தமிழ்நாட்டு மக்களுடன் இடையறாத தொடர்பு கொண்டு, இரண்டறக் கலந்து நின்று. உள்ளும் புறமும் தமிழால் ஆளப்பட்டு, உள்ளுவதனைத்தும் தமிழர் நலனே ஆக அமைந்திடத் தமிழாய்ந்த தமிழ் மகனாய் இன்று விளங்குபவர்தாம் வேறு எவர்?
பொது வாழ்வுக்குப் பெருமை சேர்க்கும் தொண்டினராய், செந்தமிழுக்கு ஆக்கம் செய்யும் திருவினராய், தமிழ் இனத்திற்கு உற்ற இடுக்கண் மாற்றும் தகவினராய் விளங்கும் தலைவர் வேறு எவர், கலைஞரே அல்லாமல்! வாழ்க கலைஞர்! நாளும் வளர்க அவர்தொண்டு! வெல்க கலைஞர்!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.