உலா இலக்கியம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. எனவே இந்நூல் சிற்றிலக்கியம் தோன்றுவதற்கான சூழல், சிற்றிலக்கியம் என்ற பெயர் காரணம் எழக் காரணம். சிற்றிலக்கிய வகைகள் குறித்து ஆய்வாளர்களின் கருத்து முதலான சிற்றிலக்கியம் குறித்த பல செய்திகளை இந்நூலின் முதல் இயலில் எடுத்துரைத்துள்ளது. இதனை அடுத்து பழமையான இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி. திருமுறைகள் முதலானவற்றில் காணப்படக்கூடிய உலா இலக்கியத்திற்கான கூறுகளைப் பற்றி இரண்டாம் இயல் ஆய்ந்து உரைக்கிறது.
இந்நூலில் மூன்றாம் இயலில் உலா இலக்கியத்திற்கான வித்து தொடங்கி, இந்த உலாவைக் காண வரக்கூடிய ஏழு பருவப் பெண்கள் யாவர் என்பது வரையிலான பல்வேறு செய்திகள் விளக்கம் பெறுகின்றன. நான்காம் இயலில் சிறப்பான உலா நூல்களாகச் சுமார் 51 நூல்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இந்த விளக்கமானது மிகவும் விரிவாக அமைந்து ஒவ்வொரு உலா நூல் பற்றியும் பல அரிய தகவல்களைக் கொண்டு அமைந்துள்ளது. எனவே பல உலா நூல்களை ஒரே இடத்தில் படித்து மகிழ்ந்த இன்பம் இந்த நூலில் மூலம் வாசகர்களுக்குக் கிடைக்கும். இவை தவிர, இதுவரை எழுந்துள்ள உலா நூல்களின் பட்டியலும், இந்நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது.
Be the first to rate this book.