சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர், தற்போது அமெரிக்காவில் பொறியியல் (Data Engineering) துறையில் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். பள்ளிப் பருவம் முதலே பேரறிஞர் அண்ணா அவர்களின் மீது வாழ்நாள் பற்றுக் கொண்டவர்.
தமிழ் வரலாறு, அரசியல் மற்றும் சமூகச் சிந்தனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை, அவரது மரபு மற்றும் பங்களிப்புகள் குறித்து ஐந்துக்கும் மேற்பட்ட மின்-புத்தகங்களை (e-books) வெளியிட்டுள்ளார். தன் எழுத்துக்களின் வழியே அண்ணாவின் தொலைநோக்குப் பார்வை, கொள்கைகள் மற்றும் இன்றைய காலகட்டத்திற்கு அவரது கருத்துக்களின் பொருத்தம் ஆகியவற்றை தற்கால வாசகர்களிடம் கொண்டு சேர்க்க இவர் முயன்று வருகிறார்.
Be the first to rate this book.