இரண்டாயிரமாண்டு வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும்மிக்க தமிழ் மொழியினால் கட்டமைக்கப்பட்ட தமிழர் வாழ்க்கை, நவீன சூழலுக்கேற்பப் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.
உலகமயமாக்கல் காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் மேலைநாடுகள் மேன்மையானயை என்ற புனைவு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் அடையாளமும் பண்பாடும் இன்று கேள்விக்குள்ளாகியுள்ளன.
தமிழ் மொழி இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாக்குப் பிடிக்கிறதோ அவ்வளவு காலம்தான் தமிழர் பண்பாடும் மரபும் தொடரும். இத்தகைய சூழலில், கல்வி, ஊடகம், மருந்து முதலாகத் தமிழர் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் எழுதியுள்ள காத்திரமான கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை வாசிப்பின் வழியாக முடிவற்ற பேச்சுகளை உருவாக்குகின்றன.
Be the first to rate this book.