'தமிழர் திருமண முறை', 'சங்ககாலத் தமிழர் நாகரிகம்', 'தமிழர் வாழ்வில் காதல்', 'அகப்பொருள் விளக்கம்', தொகை நூல்களில் - காதல் காட்சிகள்', 'திருமணம் நிகழ்த்தும் முறை, 'வாழ்க்கைக் கலை', என்பன போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள ஏடுகள் பல. அவை 'திருமணம் தொடர்பான கருத்துகளைத் தலைப்புக்கு ஏற்ற பெற்றியில் விவரிப்பன. சமுதாய வாழ்வில் திருமணத்திற்குள்ள தலையாய இடத்தை மட்டுமேயல்லாமல், தமிழர்களின் மனத்தில் பதிந்துள்ள பல எண்ணங்கள் காலப்போக்கில் நம்பிக்கையாக வளர்ந்து, உரம்பெற்று அவர்களது அறிவைச் சிறைபடுத்தி, அவர்தம் வாழ்வை, உரிமை உணர்வு தலையெடுக்காத நிலையில் அழுத்தி வைத்திருப்பதற்கான பல காரணங்களையும் ஒல்லும் வகையால் விளக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த நோக்கத்தில் இந்த நூல் முழுமை எய்தாவிடினும், பெருமளவில் பயன்தரக்கூடும் என்று நம்புகிறேன்.
- புத்தகத்திலிருந்து.
Be the first to rate this book.