சேரன் செங்குட்டுவன் பரம்பரை கனக விசயர் பரம்பரையை வீழ்த்திய வீர காதை இது. 1937 முதல் 1940 வரை தமிழகத்தையே ஒரு குமுறும் உள்ளமாக, ஒரு கொந்தளிக்கும் கடலாக சுழன்று சுழன்றடிக்கும் பெரியதோர் சூறாவளியாக மாற்றி அமைத்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் வரலாறு இது.
சண்டமாருதம் எனச் சீறி எழுந்து, நாடு நகரம் - பட்டி தொட்டி - சிற்றூர் பேரூர் எங்கணும் தன் இடி முழக்கத்தை எழுப்பித் தமிழ்நாட்டையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்ட தமிழ்ப் போராட்டக் காட்சி இது.தமிழ்நாடே!
நடராசனைப் பெற்றெடுத்த நன்னாடே! தாளமுத்தை எமக்கு ஈந்த திருநாடே!நடராசன்களும் தாளமுத்துக்களும் தோன்ற முதற்காரணமாயிருக்கும் தலைவர் பெரியாரையும் தளபதி பேரறிஞர் அண்ணாவையும் எமக்களித்த பொன்னாடே! நீ வாழ்க!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.