தமிழர்களாகிய நாம் பெற்றவற்றைவிட இழந்தவையே மிகுதி அவற்றுள் ஒன்று நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகள். இயற்கைக்காட்டில் வளரும் அத்தனை செடி, கொடி, மரம் என எல்லா வகையான தாவரங்களுமே மூலிகைகள்தான், அவற்றை எந்த நோய்க்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும்?' என்ற தெளிவு நம் முன்னோர்களிடமிருந்தது. நம்மிடம் மூலிகைகளும் இல்லை, அவை வளர்ந்த காடுகளும் இல்லை நம்மிடம் மிஞ்சி இருப்பவை நோய்களே.
பரம்பரை பரம்பரையாகத் தொடர்ச்சி அறாமல் தலைமுறைக்கும்
கையளித்துவந்த அந்த மூலிகை மருத்துவ முறைகளை நாம் நமது படிப்பறிவால் தூக்கி றிந்துவிட்டோம். அவற்றைப் புறக்கணித்தோம். அந்தத் தொடர்கண்ணியை நாமே அறுத்தெறிந்துவிட்டோம். இப்போது நாம் மூலிகைப் பாரம்பரியம் அற்றவர்களாக, தொல்மரபின் நெடிய தொடர்ச்சியிலிருந்து விலகியவர்களாக இருக்கிறோம்.
இனி நாம் என்ன செய்யப்போகிறோம். இனிவரும் தலைமுறைக்கு நாம் எவற்றைக் கயளிக்க உள்ளோம்? வெறும் நோய்களை மட்டுந்தானா?
"இந்தப் புந்தகம் வெளிவருவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்ட திரு.கே.ஆர்.என்.மனோஜ் திருப்பூரை சேர்ந்த இளைஞர். மெக்கானிக் என்ஜினியரிங்கில் எம்.டெக் முடித்திருக்கிறார் அதே சமயம் எலக்ட்ரிகல் பிரிவிலும் பரிச்சயம் மிக்கவர். இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக் சயின்ஸ துறையில் ஸ்பெஷலிஸ்ட் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கள் விக்கும் வேலை வாய்ப்புக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் CADD ட்ரெய்னர், தொழிலதிபர் கலை இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்"
Be the first to rate this book.