நாம் வாழும் இவ் வுலகம், இற்றைக்குச் சுமார் இருநூறு கோடி ஆண்டுக்கு முன்னர், பெரிய செஞ்ஞாயிற்றினின்றும் பிளவுண்டு வீழ்ந்த ஒரு சிறிய துண்டு. வீழ்ந்த துண்டு, ஒரு நூறு கோடி ஆண்டு வரை அனற்பிழம்பாய்க் கொதிப்புற்றுக் கிடந்தது. பின்னே. அது படிப்படியே தணியத் தொடங்கியது. அனல் தணியத் தணிய நிலவகைகள், உயிர்வகைகள் முதலியன தோன்றலாயின.
நிலமும் உயிருந் தோன்றியவாறே பிண்டமாய்க் கிடந்திருப்பின், அவை என்றோ பட்டுப்போயிருக்கும். அவை படாமல் வாழ்வடைந்து வருதல் கண்டுகூடு. காரணம் எங்கே? காரணம் பலபடக் கழறலாம். ஈண்டைக்கு ஒன்றைச் சிறப்பாகக் குறித்தல் நலம். அது, நிலமும் உயிரும், உயிரும் பேரும்' பெற்றமை என்சு. ஊரும் பேரும் உலகை வாழவைக்கும் பெற்றிமையுடையன என்பதை உன்னுக.
Be the first to rate this book.