கல்விக்கொள்கை குறித்தும் கல்விச்சூழல் குறித்தும் நாம் அனைவரும் தெளிவாக உணர்ந்துகொள்ளும் வகையில் உமா மகேஸ்வரி இந்நூலை எழுதியுள்ளார். பள்ளிக்கல்வி எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்கள் குறித்தும் இச்சிறுநூல் பேசுகிறது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையிலிருந்து மாணவிகளின் பெருந்துயரம் வரை எத்தனையோ சிக்கல்களை இந்நூல் பேசுகிறது.
-பேராசிரியர் யோகராஜன் கந்தசாமி
அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக்கமிட்டி
பள்ளிகளில் மாணவர் ஆசிரியர் பார்வையை உள்வாங்கிக்கொண்டு களத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒரு கல்வியாளரின் பார்வையில் விவரிக்கும் தோழர் உமாவின் பாங்கு பாராட்டத்தக்கது. அவர் இந்த நூலில் பள்ளிக்கல்வி குறித்து மட்டுமே எழுதவில்லை. உயர்கல்வித்துறைச் சிக்கல்கள், ஆட்சிப் பணியில் அருகிவரும் தமிழர்கள், வாசிப்பு இயக்கம். இவற்றோடு பெண்களின் பாதுகாப்பு உட்பட பிற அம்சங்களையும் அவரது கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன.
-ஆயிஷா இரா. நடராஜன்
எழுத்தாளர், கல்வியாளர்
பட்டதாரி ஆசிரியர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A) அமைப்பின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர். அகில இந்திய கல்லிப் பாதுகாப்புக் சுமிட்டி (AISEC) தமிழகக் குழு உறுப்பினர். தமிழால் இணைவோம் உலகப் பேரியக்கத்தின் தலைமைச் செயலாளர். கல்விச் செயல்பாட்டாளர்
Be the first to rate this book.